சூலூரில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்
கோவை மாவட்டம் சூலூர் பாப்பம்பட்டி கிராமத்தில், தடை செய்யப்பட்ட சுமார் 500 கிலோ குட்கா பொருட்கள் ரூ.10 லட்சம் மதிப்பில் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.;
கோவை மாவட்டம் சூலூர் பாப்பம்பட்டி கிராமத்தில், தடை செய்யப்பட்ட சுமார் 500 கிலோ குட்கா பொருட்கள் ரூ.10 லட்சம் மதிப்பில் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சூலூர் காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை, அயோத்தியாபுரம் பகுதியில் ரோந்து சென்ற போது, ஒரு சொகுசு பங்களா சந்தேகத்துக்கிடமாக திறந்திருப்பதை பார்த்தார். உள்ளே சென்று சோதனையிட்டபோது, ஒரு அறையில் குட்கா மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வீட்டு உரிமையாளர் கோபிநாத், வீடு மளிகைக் கடை நடத்துவதாக கூறியவர்களுக்கு வாடகைக்கு கொடுத்ததாக தெரிவித்தார். குட்கா பதுக்கியவர்கள் தலைமறைவாக உள்ள நிலையில், போலீசார் அவர்களை தேடி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.