கோவை: 10 லட்சம் மரக்கன்றுகள் நடை இலக்கு !
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் குழந்தைகள் அமைப்பான சிஐஓ (Children’s Islamic Organisation) மண்ணிலே கரங்கள், இந்தியாவோடு இதயங்கள் என்ற தலைப்பில் ஜூன் 25 முதல் ஜூலை 25 வரை நாடு முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரசாரத்தை நடத்தி வருகிறது.;
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் குழந்தைகள் அமைப்பான சிஐஓ (Children’s Islamic Organisation) மண்ணிலே கரங்கள், இந்தியாவோடு இதயங்கள் என்ற தலைப்பில் ஜூன் 25 முதல் ஜூலை 25 வரை நாடு முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரசாரத்தை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக 10 லட்சம் மரங்களை நடும் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நேற்று மாவட்டத் தலைவர் நபீளா சுரம் தெரிவித்தார். சிஐஓ அமைப்பு 5 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் நல்வளர்ச்சிக்காக இயங்கும் ஒரு அமைப்பாகும். சுற்றுச்சூழல் பாதுகாப்பை குழந்தைகள் வழியே ஊக்குவிப்பதற்காக இந்த பிரசாரம் நடத்தப்படுவதாக அவர் கூறினார். மரம் வளர்ப்பு என்பது காலநிலை மாற்றம், மழைக்குறைப்பு, வனநாசம் போன்ற பிரசனைகளுக்கு ஒரே தீர்வாகும். ஆக்ஸிஜன், நிழல், மழை, மண் பாதுகாப்பு, விலங்குகளுக்கான வாழ்விடம் ஆகியவற்றை வழங்கும் மரங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், மாத முடிவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்கும் பேரணி நடத்தப்படவுள்ளது என்றும் அவர் கூறினார்.