கோவை: காரில் 10 அடி நீள சாரைப் பாம்பு மீட்பு !
காரில் 10 அடி நீளமான விஷமற்ற சாரைப் பாம்பு மீட்பு.;
கோவை இடையர்பாளையம் பகுதியில், நடராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த அனிதா என்பவரின் டஸ்டர் காரில் 10 அடி நீளமான விஷமற்ற சாரைப் பாம்பு பதுங்கியிருந்தது. காரில் அமரும்போது உஷ், உஷ் என்ற சத்தம் கேட்டதையடுத்து சந்தேகமடைந்த அனிதா காரை விட்டு வெளியேறி சோதனை செய்தார். பின், பாம்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதும், அவர் பாம்பு பிடி நிபுணர் விக்னேஷை தொடர்பு கொண்டார். விரைந்து வந்த விக்னேஷ், சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பாம்பை பாதுகாப்பாக பிடித்தார். விஷமற்ற சாரைப் பாம்பு என்பதால் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும், பாம்பு பின்னர் வனப்பகுதிக்கு விடுவிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.