குடிநீர், சாலை வசதி கோரிக்கை: 10 முறை புகாரளித்தும் தீர்வு இல்லை – பொதுமக்கள் கண்டனம் !
கோவை மாவட்டம் சூலூர் வட்டம் கலங்கல் பேரூராட்சி கீழ் உள்ள தென்றல் நகர் பகுதி மக்கள், கடந்த 10 ஆண்டுகளாக குடிநீர் மற்றும் சாலை வசதியின்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.;
கோவை மாவட்டம் சூலூர் வட்டம் கலங்கல் பேரூராட்சி கீழ் உள்ள தென்றல் நகர் பகுதி மக்கள், கடந்த 10 ஆண்டுகளாக குடிநீர் மற்றும் சாலை வசதியின்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து 10 முறை முதல்வர் தனிப்பிரிவுக்கும், 3 முறை மாவட்ட ஆட்சியருக்கும் மனு அளித்தும், உங்கள் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்ற குறுஞ்செய்தி மட்டுமே வந்துள்ளதாக மக்கள் கூறினர். தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவின் ரசீதை பிளக்ஸாக பதித்து, பகிரங்கமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் இது குறித்த கேள்விக்கு "இது என்ன சொம்பில் இருந்து தண்ணீர் ஊற்றும் வேலையா? என அலட்சியமாக பதிலளிக்கின்றனர் என்றும், தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் கோவை-திருச்சி சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக மக்கள் எச்சரிக்கை தெரிவித்தனர்.