ராசிபுரத்தில் 10வயது சிறுவனை நாய் துரத்தி கடிக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்...
ராசிபுரத்தில் 10வயது சிறுவனை நாய் துரத்தி கடிக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்...;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர வங்கி தெரு பகுதியில் நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் நகர வங்கி தெரு வழியாக 10 வயது சிறுவன் நடந்து சென்ற நிலையில் அப்போது அங்குள்ள தெரு நாய் ஒன்று சிறுவனை துரத்தி கடிக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அதனை நேரில் கண்ட ஹரிகரன் என்பவர் கூறுகையில் அப்பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதாகவும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தனது குழந்தையை கடிக்க வந்ததாகவும்,அது குறித்து நான் மனு அளித்ததாகவும் நகராட்சியினர் நாய்களை பிடித்து அற்புதப்படுத்தினார். மீண்டும் தெரு நாய்களின் தொல்லை அதிக அளவில் காணப்படுவதால் மாவட்ட நிர்வாகம் நாய்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்...