நிலஅளவர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் நில அளவை அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் ஈடுப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.;

Update: 2025-11-19 13:01 GMT

அதன்படி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் களப்பணியாளர்களின் பணி சுமையை போக்கிட வேண்டும், தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவிகளை மீள பெற்றிட வேண்டும், புற ஆதாரம் மற்றும் ஒப்பந்த முறை பணி நியமனத்தை ரத்து செய்து காலம் வரை ஊதியத்தில் பணி நியமனம் செய்திட வேண்டும், நில அளவர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைந்திட வேண்டும், வட்டம், குறுவட்டம், நகர சார ஆய்வாளர், ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News