காங்கேயத்தில் பாஜக மாநிலத் தலைவர்  அண்ணாமலையை  கைதை கண்டித்து தெற்கு மாவட்ட தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் - 100க்கு மேற்பட்டோர் கைது  

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் பாஜக மாநிலத் தலைவர்  அண்ணாமலையை  கைதை கண்டித்து தெற்கு மாவட்ட தலைவர் தலைமையில் பேருந்து நிலையத்திற்குள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.100க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2025-03-18 03:16 GMT
காங்கேயத்தில் பாஜக மாநிலத் தலைவர்  அண்ணாமலையை  கைதை கண்டித்து தெற்கு மாவட்ட தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் - 100க்கு மேற்பட்டோர் கைது  
  • whatsapp icon
டாஸ்மாக் ஊழலை எதிர்த்து போராட்டம் நடத்திய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது: அண்ணாமலையை விடுவிக்க கோரி காங்கேயத்தில் ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட தலைவர் மோகனபிரியா தலைமையில், நகர தலைவர் சிவபிராக்ஷ் ஒன்றிய தலைவர்கள் குரு தேவராஜ்,செந்தில்குமார் முன்னிலையில் 100க்கும் மேற்பட்ட பாஜக வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், ரூ.1000 கோடி ஊழல் தொடர்பாக, முற்றுகை போராட்டம் அறிவித்திருந்த நிலையில், பா.ஜ., தலைவர் அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர்.  அண்ணாமலை கைதை கண்டித்தும், அவரை விடுதலை செய்யக்கோரி காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காங்கேயம்,சென்னிமலை,வெள்ளகோவில் ,குண்டடம் ஒன்றிய,நகர,பேரூர் தலைவர்கள் உட்பட மாவட்ட துணை தலைவர்கள் கோபாலகிருஷ்ணன்,கல நடராஜன், மாவட்ட பொதுச்செயலாளர் ஜெகன் உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News