திருச்சியில் 100 டிகிரி வெயில் பதிவு

திருச்சியில் கடந்த 6-ந்தேதி 101 டிகிரியும், கடந்த 8-ந்தேதி, 19-ந்தேதி ஆகிய நாட்களில் 100 டிகிரி வெயில் பதிவு;

Update: 2025-03-25 00:52 GMT
அக்னிநட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே திருச்சியில் கடந்த சில நாட்களாக 99 டிகிரிக் கும் அதிகமாக வெயில் கொளுத்தி வருகிறது. திருச்சியில் கடந்த 6-ந்தேதி 101 டிகிரியும், கடந்த 8-ந்தேதி, 19-ந்தேதி ஆகிய நாட்களில் 100 டிகிரி வெயில் பதிவான நிலையில் நேற்று மீண்டும் 100 டிகிரி வெயில் பதிவானது. நேற்று காலையிலும், பகலில் ஒரு சில நேரங்களிலும் வானம் அவ்வப் போது மேக மூட்டத்துடன் காணப்பட்டாலும் மதியம் 2 மணி அளவில் வெயில் வாட்டி வதைத்தது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் தகிக்கும் வெப்பத்தால் இருசக்கர வாகனங்களில் செல்லும் இளம் பெண்கள் முகத்தை துப்பட்டா கொண்டும், சேலை முந்தானை கொண் டும் மூடியபடியும், கைகளில் 'கையுறை அணிந்தபடியும் பயணம் செய் வதை பார்க்க முடிந்தது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்ப நிலை காரணமாக பகல் நேரத்தில் கடைவீதிகளில் மக்கள் கூட்டமும் குறைவாகவே காணப்பட்டது. கொளுத்தும் வெயில் காரணமாக திருச்சி மாநகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நுங்கு, இளநீர், கரும்பு ச்சாறு, பழச்சாறு, கம்பங்கூழ், தர்பூசணி, போன்றவற்றை பொதுமக்கள் நாடிச்செல்வதால், அவற்றின் விற்பனையும் சூடுபிடிக்கத்தொடங்கி உள் ளது.

Similar News