டாக்டர் கலைஞர் 102-வது பிறந்தநாள் விழா முன்னிட்டு தா.பழூர் ஒன்றிய திமுக ஒன்றிய அலுவலகம் முன்பு கொண்டாடப்பட உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தா.பழூர் ஒன்றிய திமுக அலுவலகம் முன்பு அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள ஜெயங்கொண்டம் எம் எல் ஏ வும் தா.பமூர் கிழக்கு திமுக ஒன்றிய செயலாளருமான க.சொ.கண்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.;
அரியலூர், ஜூன்.2- ஜெயங்கொண்டம் எம்எல்ஏவும்,திமுக கிழக்கு ஒன்றிய செயலாளருமான க.சொ.க.கண்ணன் ஒரு அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:- நாளை ஜூன் 3-6-2025 செவ்வாய்க்கிழமை டாக்டர் கலைஞரின் 102-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காலை 8.00 மணியளவில்,தா.பழூர் ஒன்றிய தி.மு.க அலுவலகம் முன்பு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அனுவித்து,பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் உணவுகள் வழங்கி கொண்டாடப்பட உள்ளது. மேலும்,அனைத்து கிளைகளிலும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் திருவுவ படம் வைத்து,கழக கொடியேற்றி,இனிப்புகள் வழங்கி கொண்டாட வேண்டும் எனவும் அது சமயம் மாவட்ட , ஒன்றிய , கிளை கழக பொறுப்பாளர்கள்,அணி பொறுப்பாளர்கள், கழக முன்னோடிகள் தோழர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என அவர் அதில் இவ்வாறு தெரிவித்துள்ளார்..