கலைஞரின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு காதுகேளாதார் பள்ளியில் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாட்டம்.
கலைஞரின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு காது கேளாதார் பள்ளியில் மாணவர்களுடன் திமுக விட கேக் வெட்டி கொண்டாடினர்.;
கலைஞரின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு காது கேளாதார் பள்ளியில் பிறந்தநாள் கேக் வெட்டி மாணவர்களுக்கு காலை உணவு மற்றும் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கிய எம்எல்ஏ. கலைஞரின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு காது கேளாதார் பள்ளியில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமையில் ஜெயங்கொண்டம் எம் எல் ஏ க.சொ.க. கண்ணன் கலைஞரின் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடினர். அதனைத் தொடர்ந்து பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கேக் வழங்கியதுடன் தொடர்ந்த காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. தொடர்ந்து பள்ளிக்கு அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன் வழங்க அதனை பள்ளி நிர்வாகம் பெற்றுக் கொண்டது.இதில் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதே போல் கங்கைகொண்ட சோழபுரத்தில் ஜெயங்கொண்டம் மத்திய ஒன்றிய செயலாளர் மணிமாறன் தலைமையில் பஸ் நிறுத்தத்தில் வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திரு உருவப் படத்திற்கு ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன் கலந்து கொண்டு மாலை அணிவித்து கட்சிக்கொடி ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து 200 -க்கும் மேற்பட்டோருக்கு இலவச வேட்டி சேலை மற்றும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது இதில் திமுக மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.