திருக்கண்ணபுரத்தில் முன்னாள் முதல்வரின் 102-வது பிறந்த.நாள் விழா
திமுக அரசின் 4-ம் ஆண்டு சாதனை விளக்க பிரச்சார பொதுக்கூட்டம்;
நாகை மாவட்டம் திருமருகல் அடுத்த திருக்கண்ணபுரம் ஊராட்சியில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102 -வது பிறந்த நாள் விழா, திமுக அரசின் 4- ம் ஆண்டு சாதனை விளக்க பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று நடைப்பெற்றது. கூட்டத்திற்கு, திருமருகல் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.டி.எஸ்.சரவணன் தலைமை வகித்தார். நாகை மாவட்ட திமுக செயலாளர் என்.கௌதமன் முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு, தலைமை கழக பேச்சாளர் நெய்வேலி வே.விக்ரமன், கழக இளம் பேச்சாளர் எம்.கே.சூர்யா, மாவட்ட துணை செயலாளர் ஆரூர் மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கூட்டத்தில், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் ஆர்.இளஞ்செழியன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் இளம் சுந்தர், மாவட்ட அயலக அணியின் தலைவர் சாதிக் ஜபார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பி.என்.கார்த்திக், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தி.கலையரசன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஏ.எஸ்.அருண்குமார், துணை அமைப்பாளர்கள் ராஜ்மோகன், சக்திவேல், சுகுமாறன், கனிவாளன், ராஜேஷ், செந்தில் மற்றும் மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர். முடிவில், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.