கரூரில் 102 முகாம்கள் நடைபெற்று சுமார் 74,000-மனுக்கள் பெறப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி பேட்டி.
கரூரில் 102 முகாம்கள் நடைபெற்று சுமார் 74,000-மனுக்கள் பெறப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி பேட்டி.;
கரூரில் 102 முகாம்கள் நடைபெற்று சுமார் 74,000-மனுக்கள் பெறப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி பேட்டி. திருவள்ளுவர் மைதானத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, நேற்று வரை 102 இது போன்ற முகாம்கள் நடத்தப்பட்டு அதில் சுமார் 74 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்களில் சுமார் 26 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.மீதமுள்ள மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்றைய முகாமில் பெறப்படும் மனுக்களும் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் எனவும்,மக்களுடைய தேவைகளை அறிந்து மிகச் சிறப்பாக செயல்படும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் பொதுமக்களிடம் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது என்றார்.