அரியலூர் மாவட்டம் 108 ஆம்புலன்ஸ் அவசரகால ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்க(தொமுச) கூட்டம்
அரியலூர் மாவட்டம் 108 ஆம்புலன்ஸ் அவசரகால ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்க(தொமுச) கூட்டம் நடைப்பெற்றது;
அரியலூர், ஏப்.21- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் மாவட்ட நேரடி கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜசேகர் மற்றும் மாவட்டத் துணைத் தலைவர் நீலகண்டன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயலாளர் அரி கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் பாக்யராஜ் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கடந்த 2008 முதல் தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் பணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தொழிலாளர்களின் நலன் கருதி 108 நிர்வாகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். மாவட்டத்தில் டூட்டி ரெஸ்ட் போடப்பட்டு பாரபட்சமாக பணி வழங்கப்படுவதை கண்டித்து அனைவருக்கும் முறைப்படி பணி வழங்க வேண்டும் . இந்த ஆண்டு ஊதிய உயர்வு 30% வழங்க வேண்டும் எனவும் தீபாவளி ஊக்கத்தொகை இரட்டிப்பாக வழங்க வேண்டும். 108 ஊழியர்களின் போதுமான இருப்பிடம் உடல் உபாதைகளை கழிக்க கழிவறை 15 லொக்கேஷன் செய்து தர வேண்டும் எனவும் ஏலாக்குறிச்சி மற்றும் ஸ்ரீ புரந்தான் ஆகிய இடங்களில் கூடுதலாக ஆம்புலன்ஸை நிறுவ வேண்டும் எனவும் ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.