கே எஸ் ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 11-வது பன்னாட்டு கருத்தரங்க நிகழ்வு

கே எஸ் ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 11-வது பன்னாட்டு கருத்தரங்க நிகழ்வு

Update: 2024-08-29 09:35 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கே. எஸ். ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை பொருளியல் துறை மற்றும் மேலாண்மை துறைகள் இணைந்து செயற்கை நுண்ணறிவு பயன்பாடு என்ற தலைப்பில் கருத்தரங்க நிகழ்வு நடைபெற்றது.முதல்வர் M. கார்த்திகேயன் வாழ்த்துரை வழங்கினார். முதன்மை திட்ட அலுவலர் S. பாலுசாமி,துணை முதல்வர் மற்றும் இயக்குநர்கள் கலந்து கொண்டனர். வணிகவியல் துறை இயக்குநர் D. குமரேசன் துவக்கவுரை வழங்கினார். இந்நிகழ்வில் வரவேற்புரை இரண்டாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவி M.தீபிகாஸ்ரீ வழங்கினார். இவ்விழாவில் முனைவர் சரண்குமார் ஷெட்டி DVC, ASEAN நிறுவனங்கள் மலேசியா, முனைவர் A. தமிழரசு கணக்கியல் மற்றும் நிதித்துறை பேராசிரியர் கேம்பெல்லா பல்கலைக்கழகம், எத்தியோப்பியா, முனைவர் B. ஆர்த்தி வணிகவியல் உதவிப்பேராசிரியர் தனலட்சுமி கல்லூரி, திருச்சி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு செயற்கை நுண்ணறிவு பயன்பாடு மற்றும் வாய்ப்புகள் குறித்து சிறப்புறையாற்றினார்கள். மேலும் வருங்காலத்தில் செயற்கை நுண்ணறிவு வணிகவியல் துறை, பொருளியல் துறை மற்றும் மேலாண்மை துறைகளில் எவ்வாறு செயல்படுத்தி பயன்பெறுவது போன்ற தகவல்களை பகிர்ந்துகொண்டனர். இந்நிகழ்வில் 70-க்கும் மேற்பட்ட கட்டுரையாளர்கள் தங்கள் கட்டுரைகளை வாசித்தனர். பேராசிரியர்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இரண்டாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவி N.சாந்தினி நன்றியுரை வழங்கினார்.

Similar News