குமரி : 11 சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு மாவட்ட எஸ் பி பாராட்டு
நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல்துறையில் பணியில் சேர்ந்தது முதல் 25 வருடங்கள் எந்த வித துறை ரீதியான தண்டனையும் இல்லாமல் சிறப்பான முறையில் பணிபுரிந்த பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரிந்து வரும் சிறப்பு உதவி ஆய்வாளர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.ஸ்டாலின்,சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்தார்கள். இதில் 11 பேர் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் சப் இன்ஸ்பெக்டர் பயிற்சி முடித்தால், நேரடி சப் இன்ஸ்பெக்டர்களுக்கான தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.