ராமநாதபுரம் ஊரக வளர்ச்சி துறை அலுவலக சங்கத்தின் 11 வது மாநாடு நடைபெற்றது

தனியார் மஹாலில் நடைபெற்ற ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் 11 வது மாநில மாநாட்டில் மாவட்ட ஆட்சியர் ரத்ததானம் வழங்கி மாநாட்டை துவக்கி வைத்தார்;

Update: 2025-02-20 11:14 GMT
ராமநாதபுரம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் 11 வது மாநில மாநாடு ராமநாதபுரம் அருகே தனியார் மகாலில் நடைபெற்றது இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டிற்கு சென்னை மதுரை கோவை திருச்சி சேலம் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி சிவகங்கை விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டனர் இந்த விழா இராமநாதபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நடைபெற்றது இந்த மாநாட்டை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் ரத்ததானம் வழங்கி துவக்கி வைத்தார் இதனைத் தொடர்ந்து கூடுதல் ஆட்சியர் வீர பிரதாப் சிங் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் என 200க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர் மாநாட்டிற்கு ஊரக வளர்ச்சித் துறை சங்கத்தின் மாநிலத் தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் விஜயகுமார் மாநிலச் செயலாளர் சோமசுந்தரம் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு இரண்டு நாள் மாநாட்டில் தமிழக அரசிற்கு கோரிக்கையை வலியுறுத்தி மாநாடு மற்றும் பேரணி நடைபெற உள்ளது விழாவில் கலந்து கொள்ள வருகை புரிந்த மாநில நிர்வாகிகளை கிராமிய கலைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் வரவேற்றனர் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில மாநாட்டில் ரத்ததானம் செய்த அனைவருக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன் ஜித் சிங் காலோன் பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்

Similar News