நைலான் கையிற்றில் சிக்கி 11 வயது சிறுமி பலி
பட்டிவீரன்பட்டி அருகே நைலான் கையிற்றில் சிக்கி 11 வயது சிறுமி பலி;
திண்டுக்கல், பட்டிவீரன்பட்டி அருகே சித்திரேவு பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகள் நந்தனாதேவி(11) இவர் 6-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நந்தனா தேவி வீட்டின் பரண்மேல் உள்ள துணியை எடுப்பதற்காக மேலே ஏறிய போது எதிர்பாராத விதமாக ஏர் கூலருக்காக கட்டி வைத்திருந்த நைலான் கையிறு கழுத்தில் சிக்கி உயிர் இழந்தார். இது குறித்து தகவல் அறிந்த பட்டிவீரன்பட்டி சார்பு ஆய்வாளர் ராம்சேட் மற்றும் காவலர்கள் சம்பவர் இடத்திற்கு விரைந்து சென்று நந்தனாதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.