காங்கேயத்தில் மோடியின் 11 ஆண்டு ஆட்சியின் சாதனை மற்றும் காங்கிரஸ் கட்சியின் அவசர நிலையில் 50 ஆண்டுகள் இருண்ட அத்தியாயம் குறித்து கண்காட்சி
காங்கேயத்தில் காங்கிரஸ் கட்சியின் அவசர நிலையில் 50 ஆண்டுகள் இருண்ட அத்தியாயம் குறித்து கண்காட்சி;
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் பிரதமர் மோடி அவர்களின் 11 ஆண்டுகால சாதனை மற்றும் காங்கிரஸ் கட்சியின் அவசர நிலையில் 50 ஆண்டுகள் இருண்ட அத்தியாயம் குறித்து கண்காட்சி மற்றும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் மாநில பாரதிய ஜனதா கட்சியின் பொது செயலாளர் AP முருகானந்தம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பொதுச் செயலாளர் முருகானந்தம் கூறுகையில் . அவசர நிலை காலத்தில் நடந்த கொடுமைகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட இஸ்மாயில் ஆணையம் விசாரித்ததில் இன்றைய முதல்வர் மு க ஸ்டாலின் காவல் துறையினரின் தாக்குதல் குறித்து தெரிவித்தார், கடந்த காலங்களில் இவர்கள் செய்த அட்டூழியத்தை இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ளக் கூடிய வகையில் கிளை அளவில் இருக்கக்கூடிய பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று சேர்க்கும் வகையில் பணியை மேற்கொண்டு வருகிறோம்,இன்றைய பொருந்தா கூட்டணியான காங்கிரஸ் செய்த அட்டூழியங்கள்,முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன விஷயத்தை பொதுமக்களிடத்தில் கொண்டு சேர்க்கிறோம்,தமிழகம் முழுவதும் இதனை கொண்டு சேர்த்து வருகிறோம் குறிப்பாக திருப்பூர் தெற்கு மாவட்டம் காங்கேயத்தில் தனியார் திருமணம் மண்டபத்தில் அரங்கம் அமைத்து அந்தப் பணியை மேற்கொண்டு வருகிறோம், 11 ஆண்டுகால பாரதிய ஜனதா கட்சியின் சாதனைகள் குறித்தும்தமிழகத்திற்கு மத்திய அரசாங்கம் என்ன திட்டங்கள் செய்திருக்கிறது,எவ்வளவு நிதி அளித்திருக்கிறது, தமிழகத்தை ஆளுகின்ற திமுக அரசாங்கம் எப்படி வஞ்சிக்கிறது என்றும்,தமிழ் தமிழன் தமிழினம் என எப்படி எல்லாம் ஏமாற்றுகிறது என மக்களுக்கு தெரிவிக்கும்படி செய்து வருகிறோம் குறிப்பாக பிரதமர் மோடி அவர்களின் 11 ஆண்டுகால சாதனையும்,இந்த பொருந்தா கூட்டாளியாக கூட்டணியான காங்கிரஸ் - திமுக இந்தியா கூட்டணி ஜனநாயகத்திற்கு இளைத்த அநீதியையும் மக்கள் விரோத அரசையும் மக்களிடம் நினைவூட்டும் வகையில் செய்து வருகிறோம், வரும் 2026-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியான பாஜக, அதிமுக, மற்றும் ஏனைய கட்சிகள் இணைந்து ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என பணியாற்றி வருகிறோம்,இதற்கு நல்ல அங்கீகாரம் மக்களிடத்தில் கிடைத்திருக்கிறது, தமிழகத்தில் உள்ள மக்கள் விரோத அரசாங்கம் கஞ்சா கள்ளச்சாராயம் 24 மணி நேரமும் மது விற்பனை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சமூக நீதியை குழி தோண்டி புதைக்கும் சம்பவங்கள் ,விவசாயிகள் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்த அரசாங்கம்,கொலை சம்பவங்கள்,ஒரு அரசியல் கட்சி நிகழ்வில் மது விருந்து கொடுத்து கேலிக்கூத்தை செய்தல் அரசாங்கம், மாணவர்களை சீரழித்த அரசாங்கம்,எல்லா பகுதிகளிலும் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடைக்கிறது,கொங்கு பகுதியை கொலை பகுதியாக மாற்றிய அரசாங்கம் இதை அனைத்தையும் மக்களிடத்திலே கொண்டு சேர்க்கக் கூடிய பணியை செய்து வருவதாக தெரிவித்தார். இன்றைய முதல்வராக இருக்கக்கூடிய ஸ்டாலின் அவர்கள் 23 வது வயதில் அவசர கால நிலையின் போது அவரை தாக்கியதையும் காவல்துறை செய்த அட்டூழியத்தையும் இஸ்மாயில் ஆணையத்தில் வாக்குமூலம் அளித்தார் ,எப்படி எல்லாம் அன்றைய காங்கிரஸ் அரசாங்கம் கொடுமைப்படுத்தி சிறைச்சாலையில் அடைத்து தெரிவித்திருந்தார்,இதை பொதுமக்களிடம் நினைவுபடுத்தும் வகையில் அந்த பணியை மேற்கொண்டு வருகிறோம். இந்நிகழ்வில் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மோகனபிரியா, மாநில செயலாளர் மலர்கொடி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செல்வி முருகேசன் மற்றும் மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி,மாவட்ட செயலாளர்கள் சாய் பூர்ணிமா, Dr.விஜயகுமார், ஒன்றிய தலைவர்கள் குரு தேவ்ராஜ், செந்தில்குமார்,கருணாகரமூர்த்தி, சுந்தராஜ், நகர தலைவர் சிவாபிரகாஷ் மண்டல் தலைவர்களுக்கும், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.