புதிய வருவாய் கிராமம் ஏற்படுத்துவது தொடர்பாக 11.03.2025 அன்று கிராம பொதுமக்களுடன் ஆலோசனை மற்றும் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது
புதிய வருவாய் கிராமம் ஏற்படுத்துவது தொடர்பாக 11.03.2025 அன்று கிராம பொதுமக்களுடன் ஆலோசனை மற்றும் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது;
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை கோட்டம், அருப்புக்கோட்டை வட்டம், பாலையம்பட்டி குறுவட்டத்தில் உள்ள பாலையம்பட்டி முதல்நிலை ஊராட்சியின் விரிவாக்கப்பகுதியினை பிரித்து பாலையம்பட்டி கிழக்கு மற்றும் பாலையம்பட்டி மேற்கு என புதிய வருவாய் கிராமம் ஏற்படுத்துவது தொடர்பாக அருப்புக்கோட்டை வட்டம், பாலையம்பட்டி முதல்நிலை ஊராட்சி பொதுமக்களுடன் 11.03.2025 அன்று மாலை 4.00 மணியளவில் பாலையம்பட்டி கிராமம், விஜய் மஹாலில் விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் கிராம பொதுமக்களுடன் ஆலோசனை மற்றும் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. எனவே, இந்த புதிய வருவாய் கிராமம் ஏற்படுத்துவது தொடர்பாக பாலையம்பட்டி கிராம பொதுமக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.