கரூர் மாவட்டத்தில் 110.40 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
கரூர் மாவட்டத்தில் 110.40 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.;
கரூர் மாவட்டத்தில் 110.40 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் காரணமாக பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டத்தில் நேற்று இரவு திடீரென ஒன்று கூடிய கார் மேகங்கள் மழையாக பெய்ய துவங்கி கனமழையாக மாறியது. இந்த மழை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக கரூரில் 29.20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனை தொடர்ந்து அரவக்குறிச்சியில் 5.20 மில்லி மீட்டரும் அனைப்பாளையத்தில் 12 மில்லி மீட்டரும் க.பரமத்தியில் 27 மில்லி மீட்டரும் கிருஷ்ணராயபுரத்தில் 20.00 மில்லி மீட்டரும் மாயனூரில் 13.00 மில்லி மீட்டரும் கடவூரில் 4.00 மில்லி மீட்டர் என மொத்தம் 110,40 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இதனுடைய சராசரி அளவு 9.20 மில்லிமீட்டர் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது