கோவை: 11072 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா !
கோவை வடக்கு மாவட்டம் சார்பில், கோவை புதூர் மைதானத்தில் முதல்வர் ஸ்டாலினின் 72 ஆவது பிறந்த நாளை ஒட்டி திமுக சார்பில், 11072 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.;
கோவை வடக்கு மாவட்டம் சார்பில், கோவை புதூர் மைதானத்தில் முதல்வர் ஸ்டாலினின் 72 ஆவது பிறந்த நாளை ஒட்டி திமுக சார்பில், 11072 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசும்போது, தமிழ்நாட்டின் முதலமைச்சராக தமிழக மக்களின் ஒருமித்த கருத்தோடு ஆட்சி பொறுப்பேற்ற தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்து போட்டது, அரசு பேருந்துகளில் மகளிர்க்கு கட்டணம் இல்லா பயணத் திட்டத்திற்கு தான். விடியல் திட்டங்களை, பல்வேறு மாநிலங்களும் பல்வேறு அரசியல் கட்சிகளும் பின்பற்றுகின்றன. 2021-ல் பல பகுதிகளில் நாம் தோல்வியை சந்தித்திருந்தாலும், 234 தொகுதிகளுக்கும் முதல்வர், அனைவருக்கும் ஆன திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிற முதலமைச்சராக இருக்கிறார். மகளிர் காண உரிமை தொகை திட்டம் கூட, நீங்கள் எந்த கட்சியை ஆதரிப்பவர் என்று கேட்டா கொடுக்கிறார்கள்?.. அனைவருக்கும் அனைத்தும் என்ற ரீதியில் தான் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த அரசே அனைவருக்குமான திராவிட மாடல் அரசாக தான் இருக்கிறது என்று பேசினார்.