கரூர் அருகே 111 மாணவ, மாணவியர்களுக்கு ரூ. 6.52 கோடி உயர்கல்வி பயில கடன்-ஆட்சியர் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்..

கரூர் அருகே 111 மாணவ, மாணவியர்களுக்கு ரூ. 6.52 கோடி உயர்கல்வி பயில கடன்-ஆட்சியர் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்..

Update: 2024-09-26 11:27 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் அருகே 111 மாணவ, மாணவியர்களுக்கு ரூ. 6.52 கோடி உயர்கல்வி பயில கடன்-ஆட்சியர் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.. 111 மாணவ, மாணவியர்களுக்கு ரூ. 6.52 கோடி உயர்கல்வி பயில்வதற்கான கடனுதவிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல். கரூர் என்.எஸ்.என் பொறியியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் இன்று கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. அரசுப்பள்ளியில் பயிலும் ஏழை, எளிய மாணவ, மாணவியரின் நலனுக்காக தமிழக அரசு எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மேலும், அவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடவும், அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திடவும், புதுமைப் பெண் மற்றும் தமிழ் புதல்வன் என்ற இரு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய மாவட்ட ஆட்சியர் தங்கவேல்,கல்லூரிக் காலத்தை படிப்பிற்கும் வாழ்க்கையின் உயர்விற்கும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். படிக்கும் காலத்தில் கவனச்சிதறல்கள் இல்லாமல் நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். கல்விக்காக பொருளாதாரத்தை எந்த பெற்றோரும் சுமையாக கருதக்கூடாது என்பதற்காக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக உயர்கல்வி பயில்வதற்காக கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் நோக்கம், கல்வி பயில பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதே ஆகும். அந்த வகையில், இன்றைய தினம் 111 மாணாக்கர்களுக்கு ரூ.6.52 கோடி மதிப்பீட்டில் உயர்கல்வி பயில்வதற்கான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அறிவு வளர்ச்சிக்கும், சமூக வளர்ச்சிக்கும் பெருமளவில் உதவி செய்யும் இத்திட்டத்தினை நன்கு பயன்படுத்திக் கொண்டு தங்கள் வாழ்வில் முன்னேற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தங்கவேல் மாணாக்கர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் வி.டி.பானி, தனித் துணை ஆட்சியர் பிரகாசம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வசந்தகுமார், மாணவ, மாணவியர்கள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News