உடையார்பாளையம் வடக்கு நடுநிலைப் பள்ளியில் 113ஆவது பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்கள் ஆசிரியர்கள் உறுதிமொழி ஏற்பு
உடையார்பாளையம் வடக்கு நடுநிலைப் பள்ளியில் 113ஆவது பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்கள் ஆசிரியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.;
அரியலூர் மார்ச்.22- உடையார்பாளையம் வடக்கு நடுநிலைப் பள்ளியில் 113ஆவது பள்ளி ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. ஜெயங்கொண்டம் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் குறிஞ்சி தேவி தலைமை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் கார்த்திகேயன் நூற்றாண்டு விழா ஜோதி ஏற்றினார். உதவி ஆசிரியர் கனிமொழி அனைவரையும் வரவேற்றார். தலைமை ஆசிரியர் ஹரி. சுந்தர்ராஜ் நூற்றாண்டு விழா உறுதி மொழி எடுத்துக் கொண்டார்."போதை ஒழிப்பு, பெண் குழந்தைகள் பாதுகாப்பு, எரிசக்தி சேமிப்பு, மரம் வளர்ப்பு ஆகிய தலைப்புகளில் அனைத்து மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களுடன் உறுதி மொழி எடுத்துக் கொண்டார். உதவி ஆசிரியர் வானதி ஆண்டு அறிக்கை வாசித்தார். அரசு மாணவர்களுக்கு வழங்கும் விலையில்லா பொருட்களை பட்டியல் இட்ட குறிஞ்சி தேவி மாணவர்களை அரசுப் பள்ளியில் மட்டுமே சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி கூறினார். பள்ளியின் முன்னாள் மாணவி மோனிகா "அரசு பள்ளியில் படித்துதான்" தான் வங்கி பணிக்கு வந்ததாகவும் அனைவரும் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் கல்வி கற்பதே சிறப்பு என்றும் கூறினார். இறுதியில் மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலைநிகழ்ச்சிகளை உதவி ஆசிரியர் மலர்க்கொடி தொகுத்து வழங்கினார். காலை சிற்றுண்டி சமையலர்கள் சரிதா, ஆனந்த செல்வி , மதிய உணவு திட்ட சமையலர் ஜமுனா ஆகியோர் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்தனர். கணினி ஆசிரியர் அன்னலெட்சுமி நன்றி கூறினார்.