வேதாத்திரி மகரிஷி 115 ஆவது ஜெயந்தி விழா!

கோவில்பட்டி அருணாச்சலம் பேட்டைத் தெரு அறிவுத்திருக்கோவில் சார்பாக கோவில்பட்டி மனவளக்கலை மன்றத்தில் வேதாத்திரி மகரிஷி 115 ஆவது ஜெயந்தி விழா நடைபெற்றது. ;

Update: 2025-08-18 07:31 GMT
கோவில்பட்டி அருணாச்சலம் பேட்டைத் தெரு அறிவுத்திருக்கோவில் சார்பாக கோவில்பட்டி மனவளக்கலை மன்றத்தில் வேதாத்திரி மகரிஷி 115 ஆவது ஜெயந்தி விழா நடைபெற்றது.  விழாவில் பேராசிரியர் எம்.விஜி தலைமை ஏற்று  சிறப்புரை வழங்கினார். பேராசிரியர் சரமாரிராஜ்  முன்னிலை வகித்து மகரிஷியின் திட்ட முறைகளை விளக்கினார். பேராசிரியர் கோமதி மற்றும் மன்ற அன்பர்களான நாகஜோதி, மகேஸ்வரி, மகரிஷி ஜெயந்தி விழாவினை பற்றி பேசினர்.  மேனாள் ஆசிரியர் சுரேஷ்குமார், கலந்து கொண்டு வாழ்வியல் விழுமியங்கள் பற்றியும், பேராசிரியர்  சங்கரநாராயண மூர்த்தி மகரிஷியின் அகத்தாய்வு முறைகளை விளக்கி தொடர்ந்து நன்றி கூறினார். இறுதியாக கலந்து கொண்ட அனைவரும் பிரம்மஞான பாடல் மற்றும் உலக நல வாழ்த்து பாடினர்.

Similar News