பவித்திரம்- பாலசுப்பிரமணிய சுவாமிகள் 12 ஆம் ஆண்டு குருபூஜை விழா. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

பவித்திரம்- பாலசுப்பிரமணிய சுவாமிகள் 12 ஆம் ஆண்டு குருபூஜை விழா. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Update: 2024-12-10 09:19 GMT
பவித்திரம்- பாலசுப்பிரமணிய சுவாமிகள் 12 ஆம் ஆண்டு குருபூஜை விழா. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கரூர் மாவட்டம், புகழூர் தாலுகா, பவித்திரம் கிராமத்தில் உள்ள குமார கவுண்டன் புதூரில் அமைந்துள்ள ஆன்மீக சிவராஜ யோக வள்ளல் ஸ்ரீலஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமிகள் 12 ஆம் ஆண்டு குருபூஜை விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. சிவராஜ யோகி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமிகள், கரூர் பசுபதீஸ்வரர் கோவில் அருகில் வாழ்ந்தவர். ஆன்மீக நாட்டத்தால் பல மகான்களையும், ஞானிகளையும் தரிசித்து, ஸ்ரீ கருவூரார் வழிகாட்டுதல்படி தவ வாழ்க்கை வாழ்ந்து ஆன்மீகத்தில் உயர்நிலையை அடைந்தவர். இவர் பல அன்பர்களுக்கு நல்வழி காட்டி அவர் தம் வாழ்க்கையை மேம்படுத்தி உள்ளார். இவர்,கடந்த 2012 நவம்பர் 25ஆம் தேதி அன்று முக்தி அடைந்ததால், குமார கவுண்டர் புதூரில் அவரது ஜீவ சமாதி அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து ஆண்டு தோறும் இந்த வளாகத்தில் குருபூஜை நடைபெற்று வருகிறது.அதன் அடிப்படையில் இன்று நடைபெற்ற குரு பூஜையில் சுற்றுவட்டார பகுதி சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்களாக காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் கனிகாசலம், திருச்சி வடக்கு மாவட்ட முன்னாள் தலைவர் ஜெயபிரகாஷ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்பிரமணி, கரூர் சொக்கலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு குருபூஜை விழாவை சிறப்பித்தனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர்.

Similar News