சேலம் கொண்டலாம்பட்டியில் ஓடும் பஸ்சில் நர்சிடம் 12¾ பவுன் நகை அபேஸ்
போலீசார் விசாரணை;
தூத்துக்குடி டூவிபுரத்தை சேர்ந்த தங்க மாரியப்பன் மனைவி மணியம்மாள் (வயது 36). இவர், தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் மகளின் திருமணத்திற்காக தூத்துக்குடியில் இருந்து 12¾ பவுன் நகையை ஒரு பையில் எடுத்துக் கொண்டு சேலம் வந்தார். கொண்டலாம்பட்டி ரவுண்டானா பஸ் நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்கு சென்றார். அங்கு மகளிடம் நகையை கொடுக்க பையை பார்த்துள்ளார். அப்போது பையில் நகை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக போலீசில் மணியம்மாள் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது மகளின் திருமணத்துக்காக 12¾ பவுன் நகையை எடுத்து வந்ததும், மர்மநபர்கள் திருடி சென்றதும் தெரிய வந்தது.