திருத்தங்கல் பகுதியில் 12 வது நாளாக 10,11 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு "வெற்றி நமதே" என்ற இலவச கையெடை அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார்
திருத்தங்கல் பகுதியில் 12 வது நாளாக 10,11 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு "வெற்றி நமதே" என்ற இலவச கையெடை அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார்;
சிவகாசி சட்டமன்ற தொகுதி திருத்தங்கல் பகுதியில் 12 வது நாளாக 10,11 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு "வெற்றி நமதே" என்ற இலவச கையெடை அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார் ... விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிராமப்புறங்களின் பகுதிகளில் 10,11 மற்றும் 12 -ம் வகுப்பு பயின்று வரும் மாணவ, மாணவிகள் பொதுத் தேர்வுகளில் எளிதாக வெற்றி பெற "வெற்றி நமதே" என்ற தலைப்பிலான வினாடி- வினா தொகுப்புகளடங்கிய கல்வி வழிகாட்டி கையேடு இலவசமாக வழங்கும் முயற்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஈடுபட்டுள்ளார். கல்வியில் சிறந்து விளங்கிய மாவட்டமான விருதுநகர் மாவட்டத்தை மீண்டும் கல்வியில் முன்னேற்றமடைய செய்யும் நோக்கிலும் ஏழை எளிய கிராமப்புற மாணவ மாணவிகள் எளிதில் பொதுத்தேர்வில் வெற்றி பெற தன்னால் இயன்ற பங்களிப்பை வழங்கும் நோக்கிலும் கையேடு வழங்கி வருகிறார். 12 வது நாளில் சிவகாசி சட்டமன்ற தொகுதி திருத்தங்கல் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு இலவச கையேடை ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.இலவசமாக வழங்கப்பட்ட கையேட்டை மகிழ்ச்சியுடன் மாணவர்கள் பெற்றுக் கொண்டனர்