பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்த நாள் விழா

திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை;

Update: 2025-07-15 07:04 GMT
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருகண்ணபுரத்தில், பெருந்தலைவர் காமராஜரின் 123- வது பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு, காங்கிரஸ் வடக்கு வட்டாரத் தலைவர் பி.ஜீவானந்தம் தலைமை வகித்தார். விழாவில், நாகப்பட்டினம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் ஆர்.என்.அமிர்தராஜா பெருந்தலைவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். விழாவில், தெற்கு வட்டாரத் தலைவர் எஸ்.சுரேஷ்குமார், வடக்கு வட்டார துணைத் தலைவர் டி.செந்தில்குமார், மாவட்ட செயலாளர் உ.காமராஜ், ஸ்டெல்லா சௌரிராஜன், கணேசன், ராதா, போலகம் கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News