காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா

குமாரபாளையம் மேற்கு காலனி, நகராட்சி நடுநிலைப்பள்ளியில் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.;

Update: 2025-07-16 13:58 GMT
குமாரபாளையம் மேற்கு காலனி, நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கர்மவீரர் காமராஜரின் 123 ஆவது பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாள் விழா, புதிய பாரத எழுத்தறிவு திட்டம் துவக்க விழா ஆகிய விழாக்கள் தலைமையாசிரியை கவுசல்யாமணி தலைமயில் நடந்தது. மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, கவிதை போட்டி, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. காமராஜ் குறித்த நாடகம், காமராஜ் புகழ் பாடும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. .பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவி, உறுப்பினர்கள் அர்த்தநாரீஸ்வரன், வெங்கடாசலம், விஜயகுமார், பள்ளி மேலாண்மை குழு முன்னாள் மாணவர் செந்தில்குமார் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

Similar News