வரதட்சணை கொடுமை வழக்கு 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது

வரதட்சணை கொடுமை வழக்கு 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை கைது செய்த மகளிர் காவல் துறையினர்;

Update: 2025-06-28 01:49 GMT
மூலனூரை அடுத்துள்ள புஞ்சைதலையூரை சேர்ந்தவர் லட்சுமி என்ற மீனா. இவர் கடந்த 2012-ம் ஆண்டு தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 'தனது கணவர் சதீஷ்குமார் (வயது 41) வரதட் சணை கேட்டு துன்புறுத்துவதாக புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வரதட்சணை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் சதீஷ்குமார் மேல்வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து சதீஷ்குமார் தலைமறைவானார். அவரை பிடிக்க தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் அல்லிராணி தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மண்டோதரி, பெண் காவலர்கள்தனலட்சுமி மற்றும் கற்பகம் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் சதீஷ்குமாரை தேடி வந்தனர். அப்போது அவர் நாமக்கல் அருகே உள்ள மோகனூரில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்குசென்று சதீஷ்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.வரதட்சணை கொடுமை வழக்கில் 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டுஇருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News