அஞ்செட்டி அருகே 13 வயது சிறுவன் கடத்திக் கொலை- சாலை மறியல்.
அஞ்செட்டி அருகே 13 வயது சிறுவன் கடத்திக் கொலை- சாலை மறியல்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்துள்ள மாவநட்டி கிராமத்தை சேர்ந்த சிவராஜ் - மஞ்சு தம்பதியினரின் இளைய மகன் ரோகித் (13) 8-ஆம் வகுப்பு படித்து வந்த சிறுவன் நேற்று மர்ம நபர்களால் கடத்தப்பட்டு நிலையில் அஞ்செட்டி - ஒகேனக்கல் செல்லும் சாலை ஓரத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடத்தல் குறித்து புகார் அளித்தும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுவனின் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டிருக்கின்றனர். இது தொடர்பாக சிறுவனின் நண்பர்கள் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.