பவித்திரம்- சத்குரு ஸ்ரீலஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமிகள் 13 ஆம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.

பவித்திரம்- சத்குரு ஸ்ரீலஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமிகள் 13 ஆம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.;

Update: 2025-12-01 12:19 GMT
பவித்திரம்- சத்குரு ஸ்ரீலஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமிகள் 13 ஆம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. கரூர் மாவட்டம் புகலூர் தாலுகா பவித்திரம் கிராமத்தில் உள்ள குமார கவுண்டன் புதூரில் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ சுவாமிகளின் ஜீவ சமாதி திருக்கோவிலில் இன்று 13 வது ஆண்டு குருபூஜை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. குருபூஜை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் தீபாதாரணை மகேஸ்வர பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கரூர் சித்தர் ஆன்மீக சிவராஜ யோக வள்ளல் சத்குரு ஸ்ரீலஸ்ரீ பாலசுப்பிரமணி சுவாமிகளின் பாதம் தொட்டு வணங்கினர். ஆண்டுதோறும் நடைபெறும் குருபூஜைக்கு பிறகு யாசகம் பெற்று வாழும் பற்றற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்பிப்பது வழக்கம். அதன் அடிப்படையில் இன்று பற்றற்ற சன்னியாசிகளுக்கு அன்னதானம் வழங்கி குருபூஜை விழாவை சிறப்பித்தனர்.

Similar News