குமரி எல்லை பகுதியில் காரில் கடத்திய 140 கிலோ கஞ்சா பறிமுதல்

4 பேர் கைது

Update: 2024-09-29 02:54 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஒடிசா மாநிலத்தில் இருந்து தமிழகம் வழியாக கேரள மாநிலத்திற்கு கஞ்சா கடத்துவதாக கேரளா போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதன் பேரில் திருவனந்தபுரம் ரூரல் எஸ்பி கிரண் நாராயணன் தலைமையில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் குமரி மாவட்டம் நெட்டா சோதனை சாவடி அருகே வாகன சோதனையில் நேற்று (28. ம் தேதி) அதிகாலையில்  ஈடுபட்டனர்.      அப்போது அந்த வழியாக வந்த சொகுசு கார் போலீசாரை கண்டதும் திரும்பிச் சென்றது. சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை துரத்தி சென்று மடக்கிப் பிடித்தனர். அப்போது காருக்குள் 65 மூடைகளில் 140 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.       காரில் இருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்திய போது அவர்கள் தஞ்சை மாவட்டம் வல்லம் பகுதியை சேர்ந்த நியாஸ் கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த சமீர்கான் என்பது தெரிய வந்தது. மேலும் கடத்தலுக்கு உதவியாக மற்றொரு காரில் வந்த  ஆதர்ஸ் மற்றும் சமிக்ஷா ஆகியோரையும் கைது செய்தனர். கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் விற்பனை செய்வதற்காக கஞ்சாவை கடத்திச் சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக நான்கு பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Similar News