உணவுப்பொருள் வழங்கல் சம்மந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் 14.06.2025 அன்று நடைபெறவுள்ளது.

14.06.2025 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற உள்ளது. இம்முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்மந்தமான, குறைகளைத் தெரிவித்து, பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.;

Update: 2025-06-12 14:41 GMT
உணவுப்பொருள் வழங்கல் சம்மந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் 14.06.2025 அன்று நடைபெறவுள்ளது பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்புப் பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம், பெரம்பலூர் வட்டம், மேலப்புலியூர் மேற்கு கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ச.சுந்தரராமன் தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம், மலையாளப்பட்டி கிராமத்தில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், வி.வாசுதேவன் தலைமையிலும், குன்னம் வட்டம், கீழப்புலியூர் தெற்கு கிராமத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் புவனேஸ்வரி தலைமையிலும், ஆலத்தூர் வட்டம், திம்மூர் கிராமத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரெ.சுரேஷ்குமார் தலைமையிலும் 14.06.2025 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற உள்ளது. இம்முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்மந்தமான, குறைகளைத் தெரிவித்து, பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Similar News