தந்தை பெரியார் 146 வது பிறந்தநாள் தமிழக வெற்றி கழகம் சார்பில் மலர்மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினர்.

தந்தை பெரியார் 146 வது பிறந்தநாள் தமிழக வெற்றி கழகம் சார்பில் மலர்மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினர்.

Update: 2024-09-17 07:33 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தந்தை பெரியார் 146 வது பிறந்தநாள் தமிழக வெற்றி கழகம் சார்பில் மலர்மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினர். சுயமரியாதை இயக்கம் கண்ட ஈரோட்டைச் சேர்ந்த தந்தை பெரியார், பிற்காலத்தில் திராவிட கழகம் என்ற சமூக அமைப்பை துவக்கி வைத்தார். இந்த சமூக அமைப்பின் மூலம் சமுதாய ஏற்றத்தாழ்வுகளை கலைவதற்காக தனது வாழ்நாள் முழுவதும் போராடியவர் தந்தை பெரியார். 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 இல் பிறந்த இவர் 1973 டிசம்பர் 24ல் தனது 94 வது வயதில் இயற்கை எய்தினார். ஆயினும் அவர் ஏற்றி வைத்த சுயமரியாதை என்னும் சுடர் தொடர்ந்து சுடர் விட்டுக் கொண்டிருக்கிறது. இதனால், பல்வேறு அமைப்பினரும் அவரது பிறந்த நாளை தமிழக முழுவதும் கொண்டாடி வருகின்றனர். இதன் அடிப்படையில், தமிழக வெற்றி கழகம் கரூர் மேற்கு மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில், கரூர், திருமாநிலையூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் திரு உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் செயலாளர் பாலு, பொருளாளர் ஆறுமுகம், கரூர் நகர தலைவர் கனகராஜ், கரூர் தாந்தோணி ஒன்றிய செயலாளர் ஹரி பிரகாஷ், கரூர் ஒன்றிய செயலாளர் அரவிந்த் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சுயமரியாதை இயக்க தலைவர் தந்தை பெரியாருக்கு புகழஞ்சலி செலுத்தினார்.

Similar News