கோவை: 15 வயது மாணவன் தாக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு!
மது போதை கும்பல் மாணவனை சாரமாறியாக தாக்கி தாக்குதல் நடத்தியதால் கோவையில் பரபரப்பு.;
கோவை சொக்கம்பாளையம் பிரிவு காந்தி அரசு பள்ளியில் படிக்கும் 15 வயது மாணவன், ஹாஸ்டலில் இருந்து பள்ளிக்குச் செல்ல வெளியேறியபோது நேற்று சாலையில் லிப்ட் கேட்டார். அந்த நேரத்தில் நான்கு மர்ம இளைஞர்கள் அவரை அழைத்துச் சென்று, மது குடிக்க கட்டாயம் செய்து, பின்னர் தனியார் அறையில் சிறுவனை கழிவறையில் லீபர் மற்றும் கற்களால் கொடூரமாக தாக்கினர். தலை, முதுகு மற்றும் முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்களுடன் மாணவன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதலில் மாணவன் ஹாஸ்டலில் இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறியது எப்படி எனும் கேள்வியும் எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.