புதுக்கோட்டையில் 1.50 லட்சம் பனை விதைகள் விதைக்கும் பணி தொடக்கம் !

நிகழ்வுகள்

Update: 2024-09-26 03:57 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 1.50 லட்சம் பனை விதைகள் விதைக்கும் பணி தொடங்கப்பட்டது. புதுக்கோட்டை கவிநாடு கண்மாயில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் பங்கேற்று, பனை விதைகள் விதைக்கும் பணியைத் தொடங்கி வைத்தனர்.நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் மு. அருணா தலைமை வகித்தார். மாவட்ட வன அலுவலர் சோ. கணேசலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினர் வை. முத்துராஜா,மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியப் பொறியாளர் கே. செல்வகுமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.மன்னர் கல்லூரி மாணவர்கள் மூல நடைபெற்ற இந்த விதைப்பில், சுமா 1000 விதைகள் கவிநாடு கண்மாயி விதைக்கப்பட்டன.

Similar News