திருச்சுழி மற்றும் காரியாபட்டி தாலுகாவைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட ரேசன் கடை விற்பனையாளர்கள் பணிகளை புறக்கணித்து கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு*
திருச்சுழி மற்றும் காரியாபட்டி தாலுகாவைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட ரேசன் கடை விற்பனையாளர்கள் பணிகளை புறக்கணித்து கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு*;
திருச்சுழி மற்றும் காரியாபட்டி தாலுகாவைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட ரேசன் கடை விற்பனையாளர்கள் பணிகளை புறக்கணித்து கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவிற்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் மற்றும் இலுப்பையூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் நியாய விலை கடை விற்பனையாளர்கள் ரமேஷ் மற்றும் மனோஜ் குமார் ஆகியோரை மாவட்ட வழங்கல் அலுவலர் அனிதா மற்றும் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் ஆகியோர் எந்தவித விசாரணையும் இன்றி தற்காலிக பணி நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தரமற்ற பொருள் மற்றும் எடை குறைவாக வழங்கும் திருச்சுழி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கை முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்காமல் அதிகார துஷ் பிரயோகத்துடன் நியாயவிலைக் கடை விற்பனையாளர்களை பணி நீக்கம் செய்த அதிகாரிகளை கண்டித்து திருச்சுழி மற்றும் காரியாபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட 150-க்கும் மேற்பட்ட ரேஷன் கடை விற்பனையாளர்கள் பணிகளை புறக்கணித்து கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திருச்சுழி அருகே உள்ள தமிழ்பாடி பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் இருந்து வரும் அரிசி உட்பட அனைத்து அத்தியாவசிய பொருள்களும் மிகவும் தரமற்ற நிலையிலும், எடை குறைவாகவும் வழங்கப்படுவது குறித்து மண்டல இணைப்பதிவாளர் தலைமையிலான கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலான வருவாய்துறை அதிகாரிகளுக்கும், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விற்கும் பலமுறை புகார் தெரிவித்தும் தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என ரேஷன் கடை விற்பனையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில் எந்தத் தவறும் செய்யாத கிருஷ்ணாபுரம் மற்றும் இலுப்பையூர் பகுதிகளில் பணிபுரிந்து வரும் ரேஷன் கடை பணியாளர்களை தற்காலிக பணிநீக்கம் செய்வது எந்த வகையில் நியாயம்? என கேள்வி எழுப்பும் நியாய விலைக் கடை விற்பனையாளர்கள் சங்கத்தினர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களை உடனடியாக எந்தவித நிபந்தனையும் இன்றி மீண்டும் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையெனில் விருதுநகர் மாவட்டம் முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடப் போவதாகவும் தமிழ்நாடு பொது விநியோக ஊழியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். ஆகையால் இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரேஷன் கடை விற்பனையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேட்டி : ராமசாமி (மாநில பொருளாளர், தமிழ்நாடு பொது விநியோக ஊழியர் சங்கம்)