கோவை வாசவி அம்மன் கோவிலில் 160-வது நவராத்திரி விழா!
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் – 2,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.;
கோவை வைசியாள் வீதியில் உள்ள ஸ்ரீ வாசிக வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நடைபெற்ற 160-வது நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவின் 10-வது நாளான சரஸ்வதி பூஜை தினத்தில், அம்மன் மஞ்சள் அலங்காரத்துடன் சரஸ்வதி தாயார் வேடத்தில் கையில் வீணையுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து தீபாராதனையில் பங்கேற்றனர். விழாவை முன்னிட்டு 2,000-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.