கரூரில் போலி இன்சூரன்ஸ் பாண்டு வழங்கி ரூ 17 லட்சம் மோசடி. ஆட்சியரிடம் புகார்
கரூரில் போலி இன்சூரன்ஸ் பாண்டு வழங்கி ரூ 17 லட்சம் மோசடி. ஆட்சியரிடம் புகார்;
கரூரில் போலி இன்சூரன்ஸ் பாண்டு வழங்கி ரூ 17 லட்சம் மோசடி. ஆட்சியரிடம் புகார் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் டியூக் லார்சன் எபினேசர் வயது 60. இன்று இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இன்சூரன்ஸ் மேலாளர் வெங்கட்ராமன் மீது மோசடி தொடர்பாக புகார் அளித்தார். அந்த புகாரில் மேலாளர் வெங்கட்ராமன் தன்னிடம் ரூபாய் 17 லட்சம் பெற்றுக் கொண்டு அவருடைய மனைவி பெயரில் ரூபாய் ஆறு லட்சத்திற்கு பாண்டு அளித்துள்ளார். மேலும் ஒரு 11 லட்சத்திற்கு பின்னர் பாண்டு அளிப்பதாக தெரிவித்துள்ளார். அளித்த 6 லட்ச ரூபா பாண்டு குறித்து சந்தேகம் இருந்ததால் அலுவலகத்தில் அது குறித்து விசாரித்த போது அது போலியான பாண்டு என தெரிய வந்தது. இதனால் பாதிக்கப்பட்ட எபினேசர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் தன்னிடம் மேலாளர் வெங்கட்ராமன் மோசடி செய்தது குறித்து புகார் அளித்தார். இதுகுறித்து அவரது வழக்கறிஞர் அகஸ்டின் தெரிவிக்கும் போது,கரூர் மாவட்டத்தில் இதுபோல அரசு ஊழியர்களை குறி வைத்து மேலாளர் வெங்கட்ராமன் போலியான பாண்டுகளை வழங்கி உள்ளதாக தெரிய வருகிறது. எனவே இந்த நிறுவனத்தில் இன்சூரன்ஸ் செய்த பொதுமக்கள் அந்த பாண்டுகளை பரிசோதனை செய்து உண்மை தன்மை குறித்து அறிந்து பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுக் கொண்டார். மேலும் பாதிக்கப்பட்ட எபினேஸருக்கு உரிய இழப்பீட்டை பெற்று தர வேண்டும் எனவும் மோசடி செய்த மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.