அரியலூர் மாவட்டத்தில் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை  17ஆம் தேதி விண்ணப்பிக்கலாம் 19 முதல் சேர்க்கை நடைபெறுகிறது கலெக்டர் தகவல்

அரியலூர் மாவட்டத்தில் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை  17ஆம் தேதி விண்ணப்பிக்கலாம் 19 முதல் சேர்க்கை நடைபெறுகிறது கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.;

Update: 2025-06-18 14:21 GMT
அரியலூர் ஜூன்.18- 2025 - ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர நேரடி சேர்க்கை  ஜூன் 19 ம் தேதி முதல் நடைபெறவுள்ளதை தொடர்ந்து 17 ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். மேலும் பயிற்சியில் சேர விரும்புபவர் தங்களது அசல் கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வரவும் முன்பதிவு இருக்கைகள் நிரப்பப்பட்டதில் மீதமுள்ள காலியிடங்களுக்கு மட்டும் முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. கல்வித்தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10,11,12-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி, விண்ணப்ப கட்டணத்தொகை -ரூ50/- ஒரு வருடம் தொழிற்பிரிவு சேர்கைக்கான பயிற்சி கட்டணம்-ரூ185 மற்றும் இரண்டு வருட தொழிற்பிரிவு சேர்கைக்கான பயிற்சி கட்டணம் - ரூ195 மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி மற்றும் தொலைப்பேசி எண்கள் அரசு தொழிற் பயிற்சி நிலையம், அரியலூர் - 9499055877, 04329-2284082. அரசு தொழிற் பயிற்சி நிலையம், ஆண்டிமடம்- 9499055879, 9499055880 அரசு தொழிற் பயிற்சி நிலையம், தா.பழூர்-9499055879, 9042920702 என மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி, தெரிவித்துள்ளார்.

Similar News