கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் 17.72 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கமிட்டிக்கு, மக்காச்சோளம் 650 மூட்டை, மணிலா 38, உளுந்து 12, தலா ஒரு மூட்டை எள், பச்சைப்பயிர், தேங்காய், கம்பு என 704 மூட்டை விளை பொருட்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். சராசரியாக, ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,336 ரூபாய்க்கும், மணிலா 10,461, உளுந்து 7,382, எள் 5,889, பச்சைப்பயிர் 3,699, தேங்காய் 7,402, கம்பு 2,759 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. கமிட்டியில் மொத்தமாக 17 லட்சத்து 72 ஆயிரத்து 167 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் மக்காச்சோளம் 460 மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். சராசரியாக ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,200 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக 10 லட்சத்து 22 ஆயிரத்து 471க்கு வர்த்தகம் நடந்தது. தியாகதுருகம் மார்க்கெட் கமிட்டிக்கு விவசாயிகள் யாரும் விளைபொருட்களை எடுத்து வராததால், நேற்று வர்த்தகம் எதுவும் நடக்கவில்லை.