ஆட்டோக்களுக்கு ரூ.18,000 அபராதம்!

போக்குவரத்து ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையிலான அதிகாரிகள் ஆட்டோக்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.;

Update: 2025-09-16 14:31 GMT
வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையிலான அதிகாரிகள் ஆட்டோக்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைத்ததாக 8 ஆட்டோக்களுக்கு ரூ.500 முதல் 1000 வரை என மொத்தம் 8000 அபராதம் வசூலிக்கப்பட்டது. அதேபோல் போலி பதிவெண் கொண்டு ஓட்டிய ஆட்டோவை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளருக்கு ரூ,10,000 அபராதம் விதிக்கப்பட்டது.

Similar News