முன்னாள் படைவீரர்கள் மற்றும் படையில் பணிபுரிவோரை சார்ந்தோருக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் 18.03.2025 அன்று நடைபெற உள்ளது

வீர விருது பெற்றோர், போரில் உயிர் தியாகம் செய்தோரை சார்ந்தோர், முன்னாள் படைவீரர்கள் மற்றும் படையில் பணிபுரிவோரை சார்ந்தோருக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் 18.03.2025 அன்று நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தகவல்.;

Update: 2025-03-07 15:54 GMT
விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கு, முதல்வரின் காக்கும் கரங்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் படையில் பணிபுரிவோர்களை சார்ந்தோருக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆகியவை ஒருங்கிணைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் 18.03.2025 அன்று முற்பகர் 11.30 மணிக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளது. விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மேற்கண்ட கூட்டங்களில் கலந்து கொண்டு பயனடையுமாறும், முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தங்களது அடையாள அட்டை நகலுடன் குறைகள் குறித்த மனுவுடன் (இரட்டை பிரதிகளில்) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Similar News