மாணவிகள் பெண்கள் பாதுகாப்புக்கு என அரசு அறிவித்துள்ள 181 மற்றும் மகளிர் தின இலச்சிணையை மனித சங்கிலி மூலம் உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்

மாணவிகள் பெண்கள் பாதுகாப்புக்கு என அரசு அறிவித்துள்ள 181 மற்றும் மகளிர் தின இலச்சிணையை மனித சங்கிலி மூலம் உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்;

Update: 2025-03-08 14:24 GMT
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த தனியார் கல்லூரியை சேர்ந்த 300 மாணவிகள் பெண்கள் பாதுகாப்புக்கு என அரசு அறிவித்துள்ள 181 மற்றும் மகளிர் தின இலச்சிணையை மனித சங்கிலி மூலம் உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோயிலில் செயல்படும் தனியார் கல்லூரி, நேரு யுவகேந்திரா மற்றும் தனியார் அறக்கட்டளை இணைந்து சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி சக்கரவர்த்தி, மாவட்ட இளைஞர் நலன் அலுவலர் ஞானச்சந்திரன், 181 திட்ட அலுவலர் ரேச்சல் அருமை உள்ளிட்டோருக்கு மாணவ, மாணவிகள் சார்பில் கரகாட்டம் ஆடியும் சிலம்பம் சுழற்றியபடியும் வரவேற்பு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை நீதிபதி சக்கரவர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 300 மாணவிகள் இணைந்து பெண்கள் பாதுகாப்புக்கு என அரசு அறிவித்துள்ள 181 என்ற எண் மற்றும் மகளிர் தின இலச்சினையை ( லோகோ ) மாணவிகள் மனித சங்கிலி மூலம் உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Similar News