கோவையில் காவலர்கள் பயிற்சி நிறைவு: 183 பேர் சான்றிதழ் பெற்றனர்
பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 183 காவலர்கள், கோவை பி.ஆர்.எஸ். பள்ளி மைதானத்தில் வழங்கப்பட்ட 8 மாத பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.;
தமிழகத்தில் இரண்டாம் நிலைக் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்ற மதுரை, கரூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த 183 காவலர்கள், கோவை பி.ஆர்.எஸ். பள்ளி மைதானத்தில் வழங்கப்பட்ட 8 மாத பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தனர். இந்த பயிற்சியில் கவாத்து, உடற்பயிற்சி, தீயணைப்பு, கைரேகை, நீச்சல், வெடிகுண்டு சோதனை உள்ளிட்ட பல்வேறு காவல் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டன. பயிற்சி நிறைவு விழாவில் காவல்துறை இயக்குநர் வன்னிய பெருமாள் பங்கேற்று, பயிற்சி முடித்தவர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கினார் மற்றும் அவர்களின் மரியாதையை ஏற்று பாராட்டினார். மேலும், இக்காவலர்கள் கோவைப்புதூர் மற்றும் போச்சம்பள்ளி பட்டாலியன்களில் இன்னும் ஒரு மாத கால கூடுதல் பயிற்சியில் பங்கேற்க உள்ளனர்.