கே . எஸ். ஆர். பொறியில் கல்லூரியில் 19வது பட்டமளிப்பு விழா
கே . எஸ். ஆர். பொறியில் கல்லூரியில் 19வது பட்டமளிப்பு விழா;
திருச்செங்கோடு கே எஸ் ஆர் பொறியியல் கல்லூரியில் 19 வது பட்டமளிப்பு விழா நடை பெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் தலைவர் திரு. சீனிவாசன் அவர்கள் தலைமை தாங்கி பட்டம் வாங்கிய மாணவ மாணவியருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். விழாவில் BMW குரூப் இந்திய கிளையின் வேலைவாய்ப்பு பிரிவின் இயக்குனர் திரு.சங்கர் சுந்தரலிங்கம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது பேசிய அவர் மாணவர்களாகிய நீங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு ஒருவரிடம் நீங்கள் அணுகும்முறை, அடிப்படை நாகரிகம் மற்றும் பொது அறிவு என்ற இந்த மூன்று மந்திரங்களை கடைபிடியுங்கள் என்று அறிவுறுத்தினார்.. இந்நிகழ்ச்சியில் கல்லூரிகள் அளவில் தரவரிசை பெற்ற மாணவ மாணவியருக்கு தங்கப்பதக்கங்களும், பட்டங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதில் மொத்தம் 640 மாணவ மாணவியருக்கு பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் அவர்கள் பட்டமளிப்பு விழா உறுதிமொழி வாசிக்க பட்டதாரிகள் அனைவரும் அதனை பின்மொழிந்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் நிர்வாக இயக்குனர் பேராசிரியர்.மோகன் அவர்கள், கல்லூரியின் தேர்வு கட்டுப்பாட்டாளர் பெரியசாமி, இயக்குநர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் கலந்துக் கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.