கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தையும், மீன்வளத்துறை சார்பில் 19 மீனவர்களுக்கு 6 லட்சம் மதிப்பீட்டில் குளிர் காப்பு பெட்டி பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை அமைச்சர்கள் வழங்க

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தையும், மீன்வளத்துறை சார்பில் 19 மீனவர்களுக்கு 6 லட்சம் மதிப்பீட்டில் குளிர் காப்பு பெட்டி பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை அமைச்சர்கள் வழங்கினார்கள்

Update: 2024-08-22 15:23 GMT
திருப்பூர் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தையும், மீன்வளத்துறை சார்பில் 19 மீனவர்களுக்கு 6 லட்சம் மதிப்பீட்டில் குளிர் காப்பு பெட்டி பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை அமைச்சர்கள் வழங்கினார்கள். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சி, சின்னக்கடைவீதியில் உள்ள தாராபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் திருப்பூர் மாவட்ட கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள் ஆகியோர் திறந்து வைத்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக கூட்டுறவுத்துறையின் சார்பில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் இன்றைய தினம், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமான திருப்பூர் மாவட்ட கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தினை தாராபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான கூட்டுறவுச் சங்கங்களின் பணிகள், நடைமுறைகள். கூட்டுறவு சட்டம், விதிகள், கடமைகள், பொறுப்புகள் போன்றவற்றில் போதிய பயிற்சி பெற்ற இளைஞர்கள் கூட்டுறவு சங்கங்களில் பணியில் அமர்த்தப்பட வேண்டும் என்ற சீரிய நோக்கத்துடனும், தொடக்க கூட்டுறவுச் சங்கம் முதல் தலைமை கூட்டுறவுச் சங்கம் வரை நிர்வகிக்க அனைவரும் கூட்டுறவுப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்கள் தோற்றுவிக்கப்பட்டன. திருப்பூர் மாவட்டத்தில் 1167 நியாய விலைக் கடைகளும். அதில் 805 விற்பனையாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நியாய விலைக்கடை பணியாளர்கள் பதவி உயர்வு பெற்று கூட்டுறவு சங்கங்களில் பணியில் அமர இக்கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் மூலம் கூட்டுறவு பட்டய பயிற்சி வழங்கப்படும். தாராபுரத்தில் இக்கூட்டுறவு மேலாண்மை நிலையம் அமைய உள்ளதால் அருகில் உள்ள மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட படித்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் அதிகளவில் கூட்டுறவு பட்டய பயிற்சியில் சேர்வதன் மூலம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் அவர்கள் கூட்டுறவு நிறுவனங்களுக்கு உதவியாளர் பணியிடங்களில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.எனவே. இக்கூட்டுறவு மேலாண்மை நிலையம் அமையப்பெறுவதன் மூலம் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு அதிகளவு வேலை வாய்ப்பு கிடைக்கும். இப்பகுதியில் உள்ள அனைத்துத்தர மக்களின் வாழ்வாதாரத்திற்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் இக்கூட்டுறவு மேலாண்மை நிலையம் நேரடியாகவும். மறைமுகமாகவும் உதவிபுரியும் என்பதில் ஐயமில்லை. அதனைத் தொடர்ந்து. மீன்வளத்துறையின் சார்பில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பொதுப்பிரிவினருக்கு 40 சதவீதம் மானியத் தொகை ரூ.30,000/- வீதம் 15 பயனாளிகளுக்கு ரூ.4.50 இலட்சம் மதிப்பீட்டிலும், பெண்கள் பிரிவில் 2 மீனவ மகளிருக்கும். தாழ்த்தப்பட்ட பழங்குடியின பிரிவினைச் சார்ந்த 2 பயனாளிகளுக்கு 40 மற்றும் 60 சதவீத மானியத்தில் ரூ.45,000/- வீதம் ரூ.1.80 இலட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 19 மீனவர்கள் மற்றும் மீனவ மகளிர் மீன் வியாபாரம் மேற்கொள்ள ரூ.6.30 இலட்சம் மதிப்பீட்டில் குளிர்காப்பு பெட்டி பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர்வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் திரு.சொ.சீனிவாசன். திருப்பூர் மாநகராட்சி 4- மண்டலத்தலைவர் தஇல.பத்மநாபன், தாராபுரம் நகர் மன்றத் தலைவர்.பப்புக்கண்ணன், தாராபுரம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் திரு.எஸ்.வி.செந்தில்குமார், திமுக நகரக் கழகச் செயலாளர் முருகானந்தம், நகர துணை செயலாளர் கமலக்கண்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரபாவதி, சரஸ்வதி மற்றும் துணைப்பதிவாளர் முதல்வர் திரு.செ.பழனிச்சாமி, மீன் வள ஆய்வாளர் திருமதி ரெஜினா ஜாஸ்மின்,உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டுறவுத்துறை அலுவலர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News