கரூர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை.194 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

கரூர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை.194 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.;

Update: 2025-10-12 02:00 GMT
கரூர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை.194 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மற்றும் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று பெய்த மழை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் சற்று முன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கரூர் மாவட்டத்தில் அணைப்பாளையத்தில் அதிகபட்சமாக 77.40 மில்லி மீட்டர் மழை அளவு பதிவானது. இதே போல அரவக்குறிச்சியில் 24.60 மில்லி மீட்டர் கரூரில் 11 மில்லி மீட்டர் க.பரமத்தியில் 15.80 மில்லி மீட்டர் தோகை மலையில் 12.20 மில்லி மீட்டர் கடவூரில் 8 மில்லி மீட்டர் பாலவிடுதியில் 25 மில்லி மீட்டர் மைலம்பட்டியில் 20 மில்லி மீட்டர் என மொத்தம் 194 மில்லி மீட்டர் மழை அளவு பதிவானது. இதனுடைய சராசரி அளவு 16.17 மில்லி மீட்டர் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News