ச.கண்ணனூர் பேரூராட்சி சுங்க கட்டண வசூல் குத்தகை ரூ.1.97 கோடிக்கு ஏலம்

சமயபுரம் வரும் பக்தர்களின் வாகனங்களுக்கு ச.கண்ணனூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுங்க கட்டண வசூல் செய்யும் குத்தகைக்கான ஏலம் நடைபெற்றது.;

Update: 2025-03-14 14:43 GMT
சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் வந்து செல்கின்றனர். அவ்வாறு சமயபுரம் வரும் பக்தர் களின் வாகனங்களுக்கு ச.கண்ணனூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுங்க கட்டண வசூல் செய்யும் குத்தகைக்கான ஏலம் நடைபெற்றது. ஏற்கனவே இரண்டு முறை பல்வேறு காரணங்களால் ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று மீண்டும் ஏலம் நடைபெற்றது. இதில் பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில், ஏலம் எடுக்க விண்ணப் பித்து இருந்தவர்கள் வந்து அமர்ந்தனர். ஏலத்தின்போது எவ்வித பிரச் சினையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக சமயபுரம் போலீசார் பேரூ ராட்சி அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏலத்திற்கு சம்பந்தமில்லாத வெளி நபர்கள், அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமு கர்கள் பேரூராட்சி அலுவலகத்தின் உள்ளே செல்ல முயன்றனர். அவர் களை உள்ளே செல்ல விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து பேரூராட்சி தலைவர் சரவணன், செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது. இதில் ரூ.1 கோடியே 97 லட்சத்து 9 ஆயிரத்திற்கு ஏலம் விடப்பட்டது.

Similar News